இந்தியா

தில்லியில் கட்டடம் இடிந்து விபத்து: 5 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பு

தென்மேற்கு தில்லியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

தென்மேற்கு தில்லியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தில்லியின் சத்யநிகேதன் பகுதியில் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு திடீரென கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. 

இதுகுறித்து தகவலறிந்து தில்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சின்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி டவர் Dஇல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. 

5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT