இந்தியா

ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு இழப்பீடு? வழங்குமா ரயில்வேத் துறை

DIN

கூட்ட நெரிசலான ரயிலிலிருந்து தவறிவிழும் பயணிகளுக்கு ரயில்வேத் துறை இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகப்படியான நெரிசலால் தவறி விழுந்து படுகாயமடையும் பயணிகளுக்கு மேற்கு ரயிவேத் துறை ரூ.3 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தத பயணி ஒருவர் ரயில்வேத் துறையில் இழப்பீடு கோரிய நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்கீர் வழக்கை விசாரித்தார்.

ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இழப்பீடு வழங்குவது தொடர்பாக சட்டப்பிரிவு 124(A) கீழ் வரவில்லை என்றும், மனுதாரர் ஓடும் ரயிலில் ஏற முயன்றதாகவும் ரயில்வே தரப்பில் வாதிடப்பட்டது. 

இருதரப்பு வாதத்தைக் கேட்டறிந்த வழக்குரைஞர், ரயிலிலிருந்து தவறி விழுந்த முதியவருக்கு மேற்கு ரயில்வே ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஏற்கெனவே கூட்ட நெரிசலில் வரும் ரயிலில் அவர்கள் நுழைய் முற்படும்போது மற்றொருவர் உந்தித்தள்ளும்போது பயணிகள் விழுவதற்கு வாய்ப்புண்டு. இதனை தற்செயல் நிகழ்வாக ரயில்வேத் துறை ஏன் கருதக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT