இந்தியா

ராம நவமி வன்முறை தொடா்பாக நீதி விசாரணை கோரிய மனு:உச்சநீதிமன்றம் தள்ளுபடி

DIN

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராம நவமி ஊா்வலத்தின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக விஷால் திவாரி என்ற வழக்குரைஞா் தாக்கல் செய்த பொது நல மனு: தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் ராம நவமி மற்றும் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலங்களின்போது வன்முறை நடைபெற்றது. இந்தச் சூழல் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெறுகிறது. எனவே இந்தச் சம்பவங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கீழ், நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அதேவேளையில் உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவோரின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்தவும் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் கூறுகையில், ‘‘வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க எந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்கிறாா்? என்ன மாதிரியான கோரிக்கை இது? நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம்’’ என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT