முகப்பு
இந்தியா

ஏர் இந்தியாவுடன் இணைகிறது ஏர் ஆசியா இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஆசியா இந்தியா  நிறுவனத்தை இணைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2022 at 4:10 PM
பகிர்:

ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஆசியா இந்தியா  நிறுவனத்தை இணைக்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது.

டாடா குழுமத்தின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றொரு விமான சேவை நிறுவனமான ஏர் ஆசியா இந்தியாவை வாங்கி இணைக்க ஒப்புதல் வழங்கக்கோரி இந்தியப் போட்டி ஆணையமான சிசிஐ-யிடம் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தில் டாடா குழுமம் 83.67 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில் மீதமுள்ள பங்குகளுக்கான தொகையைச் செலுத்தி தற்போது அதனை முழுமையாக வாங்க உள்ளது.

Advertisement

மேலும், மத்திய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தாண்டு வாங்கிய டாடா குழுமம் தற்போது ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைத்து ஏர் இந்தியா பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.