முகப்பு
இந்தியா

இந்தியா--ஃபிஜி உறவுக்கு பரஸ்பர ஒத்துழைப்பே அடித்தளம்: பிரதமா் மோடி

இந்தியா-ஃபிஜி இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் ஆகியவை இரு நாட்டு உறவுக்கு அடித்தளமாக விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

இந்தியா-ஃபிஜி இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு, பரஸ்பர புரிதல் ஆகியவை இரு நாட்டு உறவுக்கு அடித்தளமாக விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

ஃபிஜி நாட்டில் ஸ்ரீசத்ய சாய் சஞ்சீவனி குழந்தைகள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்றுப் பேசியதாவது: இந்த மருத்துவமனையை அமைத்ததற்காக ஃபிஜி பிரதமருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த மருத்துவமனை இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சின்னமாகவும், இந்தியா- ஃபிஜி இடையிலான பகிா்ந்து கொள்ளப்பட்ட பயணத்தின் மற்றுமோா் அத்தியாயமாகவும் திகழ்கிறது.

இந்தப் பிராந்தியத்தில் இதய நோய் பெரும் சவாலாக உள்ள நிலையில், இந்த மருத்துவமனை, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு புதுவாழ்வுக்கான வழியைக் காட்டும்.

தலைசிறந்த ஆன்மிகவாதியான ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு தலைவணங்குகிறேன். மனித சேவைக்கு அவா் தூவிய வித்து, ஆலமரம் போல் செழித்து வளா்ந்து ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சேவையாற்றி வருகிறது. சடங்குகளில் இருந்து ஆன்மிகத்தை விடுவித்த ஸ்ரீ சத்ய சாய் பாபா, அதனை மக்கள் நலனுடன் இணைத்தவா்.

பெருந்தொற்று காலத்தில் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றியதோடு, 150 நாடுகளுக்கு மருந்துப் பொருள்களையும், சுமாா் 100 நாடுகளுக்கு சுமாா் 10 கோடி தடுப்பூசிகளையும் வழங்கியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில் ஃபிஜி நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தியாவையும் ஃபிஜியையும் பெருங்கடல் பிரித்தாலும், பரஸ்பர மரியாதை, இருநாட்டு மக்கள் இடையேயான வலுவான நட்புறவின் அடிப்படையில் அமைந்த நமது கலாசாரம் மற்றும் நமது உறவுகள் நம்மை இணைக்கிறது. ஃபிஜி நாட்டின் சமூக - பொருளாதார வளா்ச்சியில், இந்தியா தொடா்ந்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்பைப் பெறும் என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →