மின்சார ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்த பரிதாபம் 
இந்தியா

மின்சார ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்தவர் என்ன சொல்கிறார்?

தனது மின்சார ஸ்கூட்டர், நடு வழியில் நின்று போனதால் கொளுத்தும் வெயிலில் அதிருப்தி ஆகி, பெட்ரோல் ஊற்றி அதன் உரிமையாளரே எரித்தச் சம்பவம் வைரலாகியுள்ளது.

DIN


ஆம்பூர்: தனது மின்சார ஸ்கூட்டர், நடு வழியில் நின்று போனதால் கொளுத்தும் வெயிலில் அதிருப்தி ஆகி, பெட்ரோல் ஊற்றி அதன் உரிமையாளரே எரித்தச் சம்பவம் வைரலாகியுள்ளது.

ஆங்காங்கே மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிந்து வருவது நாள்தோறும் பதிவாகும் செய்தியாக இருந்து வரும் நிலையில், ஆம்பூர் அருகே, நடுவழியில் ஓடாமல் நின்று போன மின்சார ஸ்கூட்டரை அதன் உரிமையாளரே பெட்ரோலை ஊற்றி எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழுக்க சார்ஜ் செய்த மின்சார ஸ்கூட்டர் 181 கி.மீ. ஓடும் என்று விற்பனை நிறுவனம் தெரிவித்திருந்தது.  ஆனால் வெறும் 50 - 60 கி.மீ. தான் ஓடியது என்கிறார் வாகனத்தை எரித்த பிரித்விராஜ்.  ஜனவரி மாதம் வாகனத்தை வாங்கியதிலிருந்தே பிரச்னைதான். குடியாத்தத்துக்கு நேற்று சென்று கொண்டிருக்கும் வழியில் பாதியிலேயே வண்டி நின்றுவிட்டது. இது குறித்து விற்பனை நிறுவனத்துக்கு போன் செய்தால், மாலை 5 மணிக்கு தான் வரமுடியும் என்கிறார்கள்.

கொளுத்தும் வெயிலில் எவ்வளவு நேரம் காத்திருப்பது. கோபம் வந்துவிட்டது. பெட்ரோல் வாங்கி வந்து ஊற்றி பைக் மீது ஊற்றி கொளுத்திவிட்டேன் என்கிறார். இந்த விடியோவை அவர் சமூக வலைத்தளத்திலும் பகிர்ந்திருந்தார். இது பலராலும் பகிரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT