இந்தியா

நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன சொல்கிறது? 5 முக்கிய விவரங்கள்

DIN

நாட்டில் இன்று புதிதாக 3,337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

மெல்ல கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தற்போதைய கரோனா நிலவரம் என்ன சொல்கிறது என்று பார்த்தால் சற்று அச்சம் தருவதாகவே உள்ளது.

அதன்படி, நாட்டில் இன்று புதிதாக 3,337 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுபோல நேற்று ஒரே நாளில் கரோனாவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரம் என்ன? 5 முக்கிய தகவல்கள்
சென்னையில் கரோனா அபாயப் பகுதியாக மாறியிருக்கும் சென்னை ஐஐடியில் புதிதாக 11 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 183 ஆக அதிகரித்துள்ளது.

ஐஐடி-சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. அங்குள்ள 17 துறைகள் முழுவதும், 19 மாணவர் விடுதிகளில், உணவகங்களில் என பல தரப்பினருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, காய்ச்சல், சளி உள்பட லேசான அறிகுறிகள் தெரிய வந்ததால் 40 மாணவர்களை தனிமைப்படுத்தியிருக்கிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் மட்டும் புதிதாக 1,490 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். தில்லியில் தொடர்ந்து 7வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று 298 ஆக இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 323 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT