இந்தியா

122 ஆண்டுகள் இல்லாத அளவு வெயில் ஏப்ரலில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இயல்புக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு ஏப்ரல் மாத வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கடந்த 122 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான 35.05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது 4ஆவது அதிகபட்ச வெப்பநிலையாகும். 

மேலும் மே மாதத்தில் சாதாரண அளவைக் காட்டிலும் அதிகபட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் வடமேற்கு மாநிலங்களில் சராசரி மழை அளவைக் காட்டிலும் 89 சதவிகிதம் மழை அளவு குறைந்துள்ளதாகவும், இதுவே ஏப்ரல் மாதத்தில் 89 சதவிகிதமாக பதிவாகியுள்ளதையும் வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT