இந்தியா

நாட்டில் இதுவரை 188.89 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

DIN


நாட்டில் இதுவரை  188.89 கோடி கரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 7 மணி வரை) 2,31,86,439 தடுப்பூசி மையங்கள் மூலம் இதுவரை மொத்தம் 1,88,89,90,935 (188.89 கோடி) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 

12-14 வயதிற்குள்பட்ட இளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி மார்ச் 16 இல் தொடங்கப்பட்டது. இதுவரை, சுமார் (2,86,98,710)-க்கும் அதிகமான முதல்கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.  

18-59 வயதினருக்கு கடந்த ஏப்ரல் 10-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. முதல் டோஸ் 5,84,25,991 ஆகவும், இரண்டாவது டோஸ் 4,22,40,428 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,688 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  2,755 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,25,33,377 ஆக உள்ளது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,684 ஆகக் குறைந்துள்ளது, இது நாட்டின் மொத்த தொற்று பாதிப்பில்  0.04 சதவிகிதம் ஆகும். குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 4,96,640 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 83,74,42,023 (83.74 கோடி) கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT