இந்தியா

அமெரிக்கா வரை சென்ற குஜராத் தேர்வு முறைகேடு: இம்முறை ஐஇஎல்டிஎஸ் தேர்வு

PTI


ஆமதாபாத்: அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்ட அதிகாரிகள், ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறதா என்று விசாரணையைத்தொடங்கியுள்ளனர்.

ஆங்கில மொழி திறனறியும் தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், தகுதியற்ற இளைஞர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதாகக் கிடைத்த புகாரின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் கனடாவில் உள்ள கல்லூரிகளில் சேர்க்கை பெற்று பிறகு அவர்கள் அமெரிக்காவுக்கு கடத்தப்படும் அபாயமிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கும் சிறப்புப் விசாரணைக் குழுவினர், தேர்வுகள் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த தேர்வின்போது, தேர்வறையில் இருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்துவைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அவர்களிடம் நீதிபதிகள் விசாரித்தபோது, அவர்களால் ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியாமல் போனது. அவர்களுக்கு ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு உதவி செய்யப்பட்டதும், விசாரணையில் அவர்கள் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 முதல் 7 வரை மதிப்பெண் புள்ளிகள் பெற்றிருந்ததும் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT