இந்தியா

நூற்றுக்கு 151 மதிப்பெண் எடுத்த மாணவர்: பல்கலை சொன்ன பதில் என்ன?

DIN


பாட்னா: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கவே மாணவர்கள் கண்விழி பிதுங்கும் நிலையில், பிகார் மாநிலம் லலித் நாராயண் மிதிலை பல்கலை மாணவர் ஒருவர் 100க்கு 151 மதிப்பெண் எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தர்பாங்கா பகுதியில் உள்ள இந்த பல்கலைக்கழகம் வழக்கமாகவே தனது இதுபோன்ற விநோதமான செயல்களால் புகழின் உச்சியில் இருக்கிறது. 

இந்த முறை, பெகுசராய்யில் உள்ள கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) பயின்ற மாணவர், ஒரு பாடத்தில் 100க்கு 151 மதிப்பெண் எடுத்ததாக தேர்வு முடிவு வெளியானது.

தேர்வு முடிவைப் பார்த்த மாணவர் கடுமையாக அதிர்ச்சி அடைந்திருப்பார். இது குறித்து அவரே கூறுகிறார்.. தேர்வு முடிவைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். ஆனால் அமைதியாக இருந்தேன், மதிப்பெண் சான்றிதழ் வரும்போது பார்க்கலாம் என்று. ஆனால், மதிப்பெண் சான்றிதழும் அப்படியே வந்தது. ஒரு முறை கூட பரிசோதனை செய்யாமலா மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆச்சரியமாக இருந்தது என்கிறார் மாணவர் அன்மோல்.

பிறகு பல்கலைக்கழகத்தில் கேட்டதற்கு, இது சாதாரண எழுத்துப் பிழைதான் என்று கூறி, புதிய மதிப்பெண் பட்டியலை அளித்திருக்கிறார்கள்.

இவரைப் போலவே, கணிதப்பதிவியல் தேர்வெழுதிய திரிமுகன் என்ற மாணவர், அப்பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் : மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

பாஜகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

ஆரணியில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வந்தவாசி நகராட்சிக்கு புதிய ஆணையரை நியமிக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT