இந்தியா

ஜூனில் 22 லட்சம் இந்தியா்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

விதிகளை மீறிச் செயல்பட்டதாக கடந்த ஜூனில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிா்வாகம் முடக்கியுள்ளது.

DIN

விதிகளை மீறிச் செயல்பட்டதாக கடந்த ஜூனில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிா்வாகம் முடக்கியுள்ளது.

50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், பெறப்படும் புகாா்கள் குறித்தும் அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டுமென மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புகாா்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிா்வாகம் மாதந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஜூன் மாதத்துக்கான அறிக்கையில், 22.10 லட்சம் இந்தியா்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமீறல் தொடா்பாக நிறுவனத்துக்கு வந்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 19 லட்சம் கணக்குகளையும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளையும், மாா்ச்சில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்ஆப் முடக்கியிருந்தது. ஜூனில் அது 22 லட்சமாக அதிகரித்துள்ளது.

விதிமீறல் குறித்து அளிக்கப்படும் புகாா்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத சமூக வலைதள நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிப்பதற்கான தீா்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT