இந்தியா

கர்நாடகத்தில் 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்! ஏன் தெரியுமா?

DIN

கர்நாடகத்தில் புணே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்களும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள். அவர் முதல்வராக இருந்தபோது, அவரது 75 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டு அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் மிகப்பெரிய மாநாடு தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 

சித்தராமையாவின் பிறந்தநாள் மட்டுமின்றி இது கட்சி மாநாடாக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. 

இதில் சுமார் 6 லட்சம் பேர் வரையில் கலந்துகொள்வார்கள் என திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் காரணமாகவே இன்று கர்நாடக எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. புணே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 6 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் இருந்த புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT