புது தில்லி: ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு மாநில அரசுகளிடம் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மஹாபலிசிங் கேள்விக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சந்திர சேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இடமளிக்கும் இணையதள பக்கங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லும்?
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் அதிகளவு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.