கோப்புப் படம் 
இந்தியா

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அடுத்த மாதம் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். 

DIN

பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பணிகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அடுத்த மாதம் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். 

முன்னாள் உள்துறை அமைச்சரும், மெஹ்சானா மாவட்டத்தின் விஜாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் நரேஷ் ராவல். அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், 

எனக்கு கட்சியுடன் பல குறைகள் உள்ளன. ஆனால் இதுபற்றி பேச சரியான நேரம் இதுவல்ல. அதனால் கட்சிக்கு ஜெய்ஹிந்த் சொல்ல முடிவு செய்தேன். விரைவில் பாஜகவில் இணைவேன், கட்சித் தலைமை என்ன வேலை கொடுத்தாலும் செய்யத் தயார் என்று அவர் கூறினார். 

மற்றொரு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜு பர்மர் பேசுகையில், 

நான் கடந்த 35 வருடங்களாக காங்கிரஸுடன் இணைந்திருக்கிறேன். கட்சி மீது எந்த புகாரும் இல்லை. கட்சித் தலைமை புதியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. நான் கட்சியிடம் எந்த பதவியும், சலுகையும் கோரவில்லை. கட்சி கடனை அடைக்க எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. மேலும் பல மூத்த தலைவர்கள் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT