மார்கரெட் ஆல்வா 
இந்தியா

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது.

DIN

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கர் மற்றும் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், மாா்கரெட் ஆல்வாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும்  பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

SCROLL FOR NEXT