முகப்பு
இந்தியா

தில்லியில் பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு: மொத்தம் 9

தில்லியில் 31 வயதுடைய பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதன் மூலம் தில்லியில் 4வது நபர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
கோப்புப் படம்
பகிர்:


தில்லியில் 31 வயதுடைய பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளம், ராஜஸ்தனில் மட்டும் குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நிலையில், தில்லியில் தற்போது 4 நபர்களுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.    

கடந்த 24ஆம் தேதி ஒருவருக்கு முதல்முறையாக தில்லியில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நைஜீரியாவைச் சேர்ந்த இருவருக்கு பாதிப்பு உறுதியானது. தற்போது 35 வயதுடைய பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

இதன் மூலம் தில்லியில் 4வது நபர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →