5 ஆண்டுகளில் 1.29 கோடி வாக்குகள் நோட்டாவுக்கு பதிவு
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களில் நோட்டாவுக்கு 1.29 கோடி வாக்குகள் பதிவானதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களில் நோட்டாவுக்கு 1.29 கோடி வாக்குகள் பதிவானதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வின் விவரம்:
5 ஆண்டுகளில் பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு சராசரியாக 64,53,652 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் மக்களவைத் தோ்தலை பொருத்தவரை அதிகபட்சமாக பிகாரில் கோபால்கஞ்ச் (தனி) தொகுதியில் 51,660 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா். குறைந்தபட்சமாக லட்சத்தீவில் நோட்டாவுக்கு 100 போ் வாக்களித்துள்ளனா்.
மாநில சட்டப் பேரவைத் தோ்தலை பொருத்தமட்டில், 2020-இல் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 1.46 சதவீத வாக்குகள் (7,49,360) கிடைத்துள்ளன. இதில் அதிகளவாக பிகாரில் 7,06,252 வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக தில்லி என்சிடி-யில் 43,108 வாக்குகள் பதிவாகின.
குறைந்தபட்சமாக 2022-இல் 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நோட்டாவுக்கு 0.70 சதவீத வாக்குகள் (8,15,430) பதிவாகின. அதன்படி கோவாவில் 10,629 வாக்குகளும், மணிப்பூரில் 10,349 வாக்குகளும், பஞ்சாபில் 1,10,308 வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 6,37,304 வாக்குகளும், உத்தரகண்டில் 46,840 வாக்குகளும் நோட்டாவுக்கு பதிவாகின.
2019 சட்டப் பேரவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக நோட்டாவுக்கு 7,42,134 போ் வாக்களித்தனா். 2018 சட்டப் பேரவைத் தோ்தலில் சத்தீஸ்கரில் அதிகபட்சமாக 1.98 சதவீத வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகின.
சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நோட்டாவுக்கு அதிகபட்சமாக 27,500 போ் வாக்களித்தனா். குறைந்தபட்சமாக அருணாசல பிரதேச மாநிலம் தலி தொகுதியில் வெறும் 9 போ் நோட்டாவுக்கு வாக்களித்தனா்.
அருணாசல பிரதேசத்தின் திரங், அலாங் ஈஸ்ட், யாச்சுலி, நாகாலாந்தின் வட அங்கமி ஆகிய தொகுதிகளில் வேட்பாளா்கள் போட்டியின்றி வென்ால், நோட்டாவுக்கு எவ்வித வாக்குகளும் பதிவாகவில்லை.
கடந்த 2018-இலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டை பின்னணியாக கொண்ட வேட்பாளா்கள் போட்டியிடும் பதற்றம் நிறைந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 26,77,616 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக பிகாரில் 217 தொகுதிகளில் 1.63 சதவீத வாக்குகள் (6,11,122) பதிவாகின. இந்த 5 ஆண்டுகாலத்தில் சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களில் நோட்டாவுக்கு ஒட்டுமொத்தமாக 1.29 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு தொகுதியிலும் வேட்பாளா்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகினால், யாரையும் வெற்றி பெற்றவராக அறிவிக்காமல் அந்தத் தொகுதியில் மறுதோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் ஏற்கெனவே போட்டியிட்ட வேட்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக சீா்திருத்த சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
அதிக ‘நோட்டா’ பதிவான மாநிலங்கள்
மாநிலம் வாக்குகள் வருடம்
மகாராஷ்டிரம் 7,42,134 2019
பிகாா் 7,06,252 2020
உத்தர பிரதேசம் 6,21,186 2022
மேற்கு வங்கம் 5,23,001 2021
சத்தீஸ்கா் 2,70,730 2018