கோப்புப்படம் 
இந்தியா

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் தங்கக் கட்டிகள்!

லக்னெள சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN

லக்னெள சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லக்னெள செளத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்திற்குள் உள்ள சோதனைப் பகுதி அருகே உள்ள குப்பைத் தொட்டியில், கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் இருந்து 6 தங்கக் கட்டிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ. 36.60 லட்சம் இருக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

குப்பைத் தொட்டியில் தங்கக் கட்டிகளை போட்ட நபரைக் கண்டுபிடிக்க, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், சில விமான நிலைய ஊழியர்களை கண்காணித்து வருவதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT