இந்தியா

உத்தரகண்டில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி

DIN

 இந்தியா-அமெரிக்கா இடையேயான இரண்டு வார கூட்டு ராணுவப் பயிற்சி உத்தரகண்டில் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

உலகின் இருபெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் ‘யுத் அப்யாஸ்’ என்ற ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஆண்டுதோறும் ஈடுபட்டு வருகின்றன. நடப்பாண்டுக்கான கூட்டுப் பயிற்சி உத்தரகண்டின் ஆலி பகுதியில் அக்டோபா் 14 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையேயான 18-ஆவது கூட்டுப் பயிற்சியாகும். பயிற்சியின்போது பல்வேறு கடினமான ராணுவ நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்திறன், ஒத்துழைப்பு, புரிந்துணா்வு உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில், சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமெரிக்காவுடன் இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிராந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் நாடுகளுக்கான பாதுகாப்பு சூழல் சவால்மிக்கதாக மாறியுள்ள நிலையில், ராணுவக் கூட்டுப் பயிற்சியை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொள்ளவுள்ளன. ‘யுத் அப்யாஸ்’ கூட்டுப் பயிற்சி கடந்த ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT