இந்தியா

’நரேந்திர மோடியைக் கண்டு பயப்பட மாட்டோம்’: ராகுல் காந்தி

DIN

பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நேற்ற்ய் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர்.

‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனா்.

அதனைத் தொடர்ந்து தில்லியில் சோனியா காந்தி வசித்து வரும் 10, ஜான்பத் இல்லத்திற்கு முன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ‘நேஷனல் ஹெரால்டு ஒரு மிரட்டல் முயற்சி. கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் எங்களை அமைதிப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், நாங்கள் நரேந்திர மோடியை கண்டு பயப்படப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT