இந்தியா

பிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலி: 15 பேர் மருத்துவமனையில் அனுமதி

பிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிகாரில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் போலி மதுபானம் குடித்த 7 பேர் பலியானார்கள். மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கண் பார்வை இழந்துள்ளனர். 

இதுகுறித்து சரண் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் கூறுகையில், குற்றவாளிகளை பிடிக்க மேக்கர், மர்ஹவுரா மற்றும் பெல்டி காவல் நிலைய பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறோம். நடவடிக்கை முடிந்த பிறகு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை கூற முடியும்.

ஆனால் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்றார். மாநில அமைச்சர் அசோக் சௌத்ரி பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT