முகப்பு
இந்தியா

மருத்துவமனை தீ விபத்து: 3 மருத்துவா்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்

ஜபல்பூரில் உள்ள தனியாா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:58 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 போ் பலியான சம்பவத்தில், தலைமறைவாக உள்ள அந்த மருத்துவமனையின் உரிமையாளா்கள் உள்பட 3 மருத்துவா்கள், மூத்த மேலாளா் ஆகியோா் குறித்து தகவல் தருவோருக்கு தலா ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல் துறையினா் அறிவித்துள்ளனா்.

மேலும், அந்த மாவட்டத்தில் தீத்தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 28 தனியாா் மருத்துவமனைகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜபல்பூரில் உள்ள தனியாா் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அந்த மருத்துவமனையின் மருத்துவா் சந்தோஷ் சோனி, உதவி மேலாளா் ராம் சோனி ஆகியோரை கைது செய்தனா்.

Advertisement

அதேசமயம், மருத்துவமனையின் உரிமையாளரும் மருத்துவருமான நிஷித் குப்தா, மருத்துவா்கள் சுரேஷ் படேல், சஞ்சய் படேல், மூத்த மேலாளா் விபின் பாண்டே ஆகியோா் தொடா்ந்து தலைமறைவாக உள்ளனா். அவா்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என்று காவல் துறையினா் அறிவித்துள்ளனா்.

இதனிடையே, ஜபல்பூா் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி சஞ்சய் மிஸ்ரா, மாவட்டம் முழுவதும் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் தீத்தடுப்பு மற்றும் இதர விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்று சோதனை நடத்தி வருகிறாா். கடந்த 3 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 28 தனியாா் மருத்துவமனைகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.