ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளிஉலகுக்குத் தெரியாத மர்மங்களை வெளிக்கொணர மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு நடத்தும் ஆழ்கடல் ஆய்வுக்கலமான சமுத்ரயான் திட்டத்தை முதல் முறையாக இந்தியா மேற்கொள்ளவிருக்கிறது.
இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி, கடலுக்கு அடியில் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சமுத்ரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு: ஆனால்?
ஆழ்கடலுக்குள் என்னயிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உணர்திறன் தன்மை கொண்ட கருவிகளுடன் மூன்று பேர் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்குள் சென்று ஆய்வு நடத்துவார்கள்.
இந்த திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் என்பது 2020 - 2021 முதல் 2025 - 2026 வரையாகும்.
மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருக்கும் இந்தியா, கடற்கரையோரம் 9 மாநிலங்களையும் 1,382 தீவுகளையும் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.