இந்தியா

'நமது ஆட்சியால் அசிங்கப்படுகிறேன்': பாலியல் புகாரால் பாஜக எம்.பி. கோபம்

உத்தரப் பிரதேசத்தில் நமது ஆட்சிதான் நடக்கிறது என்று கூறவே அசிங்கப்படுகிறேன் என பாஜக எம்.பி. மகேஷ் சர்மா செய்தியாளர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


உத்தரப் பிரதேசத்தில் நமது ஆட்சிதான் நடக்கிறது என்று கூறவே அசிங்கப்படுகிறேன் என பாஜக எம்.பி. மகேஷ் சர்மா செய்தியாளர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது மகேஷ் சர்மா, இவ்வாறு தெரிவித்தார். 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள வீட்டுவசதி வாரியத்தில், பாஜக பிரமுகரான ஸ்ரீகாந்த் தியாகி இளம்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினர் ஸ்ரீகாந்த் தியாகி குறித்து தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் அறிவித்தது. 

இந்நிலையில், பாஜக பிரமுகரான ஸ்ரீகாந்த் காவல் துறையில் சரணடைந்தார். மேலும், இளம்பெண்ணை கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, இது தொடர்பான தகவல் அறிந்து சம்பவம் நடைபெற்ற குடியிருப்புப் பகுதிக்கு வந்த பாஜக எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வந்த அலைபேசியை அவர் எடுத்துப்பேசினார். அதில், நமது அரசாங்கம் நடக்கிறது என்று கூறவே அசிங்கமாக உள்ளது. இதை விட பெரிய அவமானம் எதுவும் இனி நேர்ந்துவிடாது எனக் கோபத்துடன் பதிலளித்துள்ளார். இந்த விடியோவை அங்கிருந்த செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போது இதனை காங்கிரஸ் கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பாஜக குறித்து பாஜக எம்.பி. சர்ச்சைக்குரிய வகையில் பேசியது இணையத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT