இந்தியா

ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலில் அமித் ஷா வழிபாடு

ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வழிபாடு மேற்கொண்டார். 

PTI

ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று வழிபாடு மேற்கொண்டார். 

ஒரு நாள் சுற்றுப் பயணமாக ஒடிசா வந்துள்ள அமித் ஷா சிரவண மாதத்தின் கடைசி திங்கள் கிழமையான இன்று ஸ்ரீ லிங்கராஜ் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்றார். 

சுமார் 20 நிமிடங்கள் அமித்ஷா கோயிலினுள் இருந்ததால், கோயிலைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 

இவருடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புவனேஸ்வர் எம்பி அபராஜிதா சாரங்கி மற்றும் இதர மூத்த பாஜக தலைவர்களும் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.

ஷா, அங்கிருந்து பாஜக மாநிலத் தலைவர் சமீர் மொகந்தியின் இல்லத்திற்குச் சென்றார், அங்கு அவர் தனது குடும்பத்தினர் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் காலை உணவைச் சாப்பிட்டார்.

அடுத்ததாக கட்டாக்கில் உள்ள ஒடியா பஜாரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த இடத்தை பார்வையிட்டதோடு, நேதாஜி அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். அங்கு போஸின் குழந்தைப் பருவத்துடன் தொடர்புடைய நினைவுப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒடியா நாளிதழான பிரஜாதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் ஷா கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த புத்தகத்தை அவர் வெளியிடுகிறார்.

கட்டாக் செல்லும் வழியில், பல்வேறு இடங்களில் பாஜக தொண்டர்கள் ஷாவை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிக்கல்டான், டோனி டி ஸார்ஸி அரைசதம்; தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்!

இரவில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: இருமல் மருந்து நிறுவனத்தின் உரிமம் முழுமையாக ரத்து!

வெற்றி மாறன் - மாரி! கேட்டதும் நடிக்க ஒத்துக்கிட்டேன்! அமீர் | Bison | Audio Launch

நீதி வெல்லும்! தவெக விஜய் கருத்து!

SCROLL FOR NEXT