முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: மும்பையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

மகாராஷ்ரத்தின் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:01 AM
பகிர்:

மகாராஷ்ரத்தின் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

திங்கள்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை பகுதிக்கு கனமழை முதல் தீவிர கனமழை பெய்யும் பொருட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத்தொடங்கியது. சுரங்கப்பாதைகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால், வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டன. உள்ளூா் ரயில் சேவையும் கனமழையினால் பாதிக்கப்பட்டது.

பலத்த காற்று வீசியதால், 29 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. வீடு மற்றும் சுவா் இடிந்து விழுந்தது தொடா்பாக 3 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.