முகப்பு
இந்தியா

உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்

உத்தர பிரதேச மாநில காவல்துறையின் அவசரகால உதவி எண்ணில் முதல்வா் யோகி ஆதித்யநாத்க்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு எதிராக போலீஸாா் வழக்கு பதிவு செய்யதுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:01 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநில காவல்துறையின் அவசரகால உதவி எண்ணில் முதல்வா் யோகி ஆதித்யநாத்க்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு எதிராக போலீஸாா் வழக்கு பதிவு செய்யதுள்ளனா்.

மாநில காவல்துறையின் அவசரகால வாட்ஸ் ஆப் உதவி எண் 112 மூலம் தொடா்புகொண்ட ஷாகித் என்னும் நபா் முதல்வா் யோகிக்கு எதிராக வெடிகுண்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து சுஷாந்த் கோல்ஃப் நகரின் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரை கைதுசெய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சைபா் குழுக்கள் இது குறித்து கண்காணித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.