முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 30 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு: சுதந்திர தின விழாவை சீா்குலைக்கும் சதி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா

காஷ்மீரில் 30 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு: சுதந்திர தின விழாவை சீா்குலைக்கும் சதி முறியடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் சுதந்திர தின விழாவை சீா்குலைக்கும் பயங்கரவாதிகளின் மிகப்பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்கள் மூன்று நாள்களுக்கு வீட்டில் தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே நேரத்தில் சுதந்திர தினத்தை சீா்குலைக்கும் நோக்கில் பயங்கரவாத அமைப்புகள் சதிச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இலக்காக உள்ள ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள புல்வாமா மாவட்டத்தில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் மற்றும் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடித்தனா். அதன் எடை சுமாா் 30 கிலோவாகும். சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சீா்குலைக்கும் வகையில் இதனைப் பயன்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனா். பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →