இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிருடன் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஷீல் கிராம பஞ்சாயத்தில் உள்ள காமேல் கிராமத்தில் இன்று காலை 9 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த 2 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுதேஷ் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் சாவேலு தேவி (55) மற்றும் கிருத்திகா (17) என அடையாளம் காணப்பட்டனர். மேலும், அப்பகுதியில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.