இந்தியா

குஜராத்: காங். எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய விபத்தால் 6 பேர் பலி

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய சாலை விபத்தில் 6 பேர் பலியானதையடுத்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PTI

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் ஏற்படுத்திய சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆனந்த் நகரத்தை தாராபூருடன் இணைக்கு மாநில நெடுஞ்சாலையில் சோஜித்ரா கிராமத்திற்கு அருகே வியாழன் மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. 

காங்கிரஸ் எம்எல்ஏவின் மருமகன் கார் ஓட்டும் போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். 

விபத்தை ஏற்படுத்தியவர் சோஜித்ரா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பூனம்பாய் பர்மாரின் மருமகன் கேதன் பதியார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பதியார் தற்போது அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சோஜித்ரா காவல் நிலைய துணை ஆய்வாளர் ஏ.பி.பர்மர் தெரிவித்தார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன்  கூறுகையில், 

பதியார் கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கைது செய்யப்படுவார். மேலும் அவர் வாகனத்தை ஓட்டும்போது குடிபோதையில் இருந்தாரா என்பதை இரத்த மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளோம் என்றார். 

உயிரிழந்த ஆறு பேரும் சோஜித்ரா மற்றும் போரியாவி கிராமங்களில் வசிப்பவர்கள் ஆவார். பதியார் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றார். ஆனால் அவர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு பிடிபட்டார் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT