இந்தியா

10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை விற்பனை செய்த அஞ்சல் துறை

DIN

புது தில்லி:  10 நாள்களில் 1 கோடி தேசியக் கொடிகளை அஞ்சல் துறை விற்பனை செய்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை மூலம் 10 நாள்களுக்குள் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக குடிமக்களுக்கு 1 கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகளை விற்பனை செய்துள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தேசியக் கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இணையதளத்தின் மூலம் பதிவு  செய்பவர்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் விநியோகிக்கப்படுகிறது.

இணையதளம் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இருக்கும் குடிமக்களுக்கு தேசியக் கொடிகளைக் கொண்டு செல்வதே எங்கள் இலக்கு என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதற்கு நாடு முழவதும் 4.2 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT