முகப்பு
இந்தியா

பிகாரில் போலி மதுபானம் குடித்து 4 பேர் பலி

பிகாரில் போலி மதுபானம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 12 ஆகஸ்ட், 2022 at 12:44 PM
பகிர்:

பிகாரில் போலி மதுபானம் குடித்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மதுரா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இந்த சம்பவம் சரண் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

இறந்தவர்கள் காமேஷ்வர், மஹ்தோ, ரோஹித் சிங், ராஜேந்திர ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அனைவரும் புவல்பூர் கிராமத்தில் வசிப்பவர்கள், அல்லாவுதீன் கான் என்பவர் பக்கத்து கர்கா ஓதா கிராமத்தைச் சேர்ந்தவர்.

மேலும் சிலர் உடல்நிலை சரியில்லாமல் சாப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி, பெல்டி மற்றும் மேக்கர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமங்களில் போலி மதுபானம் அருந்திய 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.