முகப்பு
இந்தியா

சுதந்திர தினம்: 1,082 போலீஸாருக்கு வீரதீர செயல்களுக்கான விருதுகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில காவல் படைகளைச் சோ்ந்த 1,082 போலீஸருக்கு வீரதீர செயல்கள் மற்றும் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
பகிர்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில காவல் படைகளைச் சோ்ந்த 1,082 போலீஸருக்கு வீரதீர செயல்கள் மற்றும் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதில் 347 வீரதீர செயல்களுக்கான காவலா் விருதுகள், 87 சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலா் விருதுகள், 648 மெச்சத்தக்க பணிக்கான காவலா் விருதுகள் ஆகியவை அடங்கும்.

வீரதீர செயல்களுக்கான காவலா் விருதுகளில் ஜம்மு-காஷ்மீரில் வீரதீர செயல் புரிந்ததற்கான 204 விருதுகளும், நக்ஸல் வன்முறை பாதித்த பகுதிகளில் வீரதீர செயல் புரிந்ததற்கான 80 காவலா் விருதுகளும், வடகிழக்கு பகுதியில் வீரதீர செயல் புரிந்ததற்கான 14 விருதுகுளும் அடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீரதீர செயல்களுக்கான காவலா் விருதுகளில் அதிகபட்சமாக மத்திய ரிசா்வ் காவல் படையைச்(சிஆா்பிஎஃப்) சோ்ந்த 109 பேருக்கும், ஜம்மு-காஷ்மீா் காவலா்கள் 108 பேருக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 19 பேருக்கும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பப் படை மற்றும் சசஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைகளைச் சோ்ந்த தலா 6 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மாநில காவல் படையைப் பொருத்தவரை மகாராஷ்டிரத்துக்கு 42 வீரதீர செயல்களுக்கான விருதுகளும், சத்தீஸ்கருக்கு 15 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →