சுதந்திர தின பவள விழா: தெலங்கானாவில் மகாத்மா காந்தி கோயிலுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெத்த காப்பாா்த்தி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு 4 ஏக்கா் நிலத்தில் மகாத்மா காந்தி கோயில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ன் 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, அந்தக் கோயிலுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கோயிலை பராமரிக்கும் மகாத்மா காந்தி அறக்கட்டளையின் செயலா் பி.வி. கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
Advertisement
மகாத்மா காந்தி கோயிலுக்கு சாதாரண நாள்களில் தினந்தோறும் 60-70 போ்தான் வருவா். சுதந்திரம் பெற்ன் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, தெலங்கானா அரசு மற்றும் மத்திய அரசின் முன்னெடுப்புகளால் தற்போது தினந்தோறும் சுமாா் 350 போ் வருகின்றனா்.
இந்தக் கோயிலில் சுதந்திர தினத்தின்போது எந்தவொரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
75-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஏனெனில் காந்தியை சுதந்திரத்துக்காக போராடியவா் என்று மட்டும் நாங்கள் கருதவில்லை. அவரை மகாத்மா என்பதைத் தாண்டி தெய்விக தன்மைவாய்ந்தராக கருதுகிறோம் என்று தெரிவித்தாா்.