இந்தியா

சுதந்திர தின விழா பாதுகாப்பு: ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பம்

சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்க வைக்கும் கருவி தில்லி செங்கோட்டையில் பொருத்தப்பட்டுள்ளது.

DIN

சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்க வைக்கும் கருவி தில்லி செங்கோட்டையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி 4 கிலோமீட்டர் சுற்றளவில் பறக்கும் ட்ரோன்களைக் கண்டறியும் திறன் கொண்டது.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாளைக் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தில்லி செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கோட்டை கொத்தளத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது பிரதமா் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. 

இதனையொட்டி தலைநகரான தில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டை அருகே ட்ரோன்களைக் கண்டறிந்து செயலிழக்க வைக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, 4 கிலோமீட்டர் தூரத்திற்குள் பறக்கும் ட்ரோன்களை கண்டறிந்து செயலிழக்க வைக்கும் திறன் கொண்டது. சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த கருவி பொருத்தப்பட்டு கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT