உத்தரப் பிரதேசத்தில், நீதிமன்றத்தின் வெளியே விசாரணைக் கைதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் கைதியான லக்கன்பால், ஹரியாணாவில் இருந்து உ.பி.யில் உள்ள ஹாபூர் நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருடன் சென்ற ஹரியாணாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
விசாரணைக் கைதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, மர்ம நபர்கள் நீதிமன்றத்தை விட்டுத் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.