கோப்புப் படம் 
இந்தியா

ரூ. 17 லட்சம் மதிப்புடைய சாக்லேட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள்! காவல்துறை வழக்குப்பதிவு

உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புடைய கேட்பரி சாக்லேட் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

உத்தரப் பிரதேசத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புடைய கேட்பரி சாக்லேட் திருட்டு போனது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள அருகே சின்ஹாட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து 17 ரூபாய் லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட் பார்கள் திருடு போயுள்ளன. 

திங்கள் நள்ளிரவு அன்று இந்த திருட்டுச் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, யாராவது திருடியிருந்தால் தயவுசெய்து முன்வந்து திருடியதை திருப்பி கொடுத்துவிடும்படி சாக்லேட் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து கேட்டுக்கொண்டுள்ளார்.

சாக்லேட்டுகளை சேமித்து வைப்பதற்காக தன் வீட்டை குடோனாகப் பயன்படுத்துவதாகவும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து தனது பக்கத்து வீட்டுக்காரர் செவ்வாயன்று தனக்கு தகவல் தெரிவித்ததாகவும் சித்து கூறினார். 

மர்ம நபர்கள் சாக்லேட்டைத் திருடியதுடன் வீடியோ ரெக்கார்டர் மற்றும் சிசிடிவி கேமராக்களின் பிற உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். 

இதையடுத்து, அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT