இந்தியா

15 மணி நேரம்.. ஆர்டிஓ வீட்டில் நடந்த சோதனை; 550 மடங்கு சொத்துக் குவிப்பு

DIN

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஆர்டிஓ சந்தோஷ் பால் வீட்டில் நடந்து வந்த பொருளாதார குற்றத் தடுப்பு நடவடிக்கைக் குழுவினரின் சோதனை 15 நேரம் நீடித்தது.

வீட்டிலிருந்து 16 லட்சம் ரொக்கப் பணம், 500 முதல் 600 கிராம் தங்க நகைகள், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு அரசு அதிகாரி, அதுவும் ஆர்டிஓ வீடுதானே என்று அலட்சியமாக சென்றிருந்த அதிகாரிகளுக்கு, 6 சொகுசு பங்களா, 2 சொகுசு கார்கள், வீட்டுக்குள்ளேயே அதிநவீன திரையரங்கு, பண்ணை வீடு, நீச்சல் குளத்துடன் 10000 சதுர அடியில் மாளிகைப் போன்ற வீடு, நகை, பணத்தை பறிமுதல் செய்தபோது சற்று மலைப்பாகத்தான் இருந்திருக்கும்.

போபாலில் மண்டல போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) சந்தோஷ் பால் மற்றும் அவரது மனைவி கிளெர்க் ரேகா பால் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வந்த புகாரினையடுத்து புதன்கிழமை இரவு, பொருளாதார குற்றத் தடுப்பு அதிகாரிகள் வீட்டுக்கு சோதனைக்குச் சென்றனர். இந்த சோதனை சுமார் 15 மணி நேரம் நீடித்து வியாழக்கிழமைதான் நிறைவு பெற்றது.

அங்கிருந்து 16 லட்சம் ரொக்கப் பணம், இரண்டு சொகுசு கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், ஏராளமான நகைகள், ஆவணங்கள் என பலவற்றை பறிமுதல் செய்தனர்.


இந்த சோதனையில், அவர்கள் தங்கள் வருமானத்தை விட 550 மடங்கு அதிகமாக சொத்துக் குவித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை வரை நீடித்த இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை அளவிடும் பணி தொடங்கியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT