இந்தியா

இந்திய-வங்கதேச எல்லையில் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எப் வீரர் படுகாயம்

வடக்கு திரிபுராவின் இந்தியா-வங்கதேச எல்லையில் என்எல்எப்டி பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பயடுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

வடக்கு திரிபுராவின் இந்தியா-வங்கதேச எல்லையில் என்எல்எப்டி பயங்கரவாதிகளுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பயடுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

காயமடைந்த வீரர் பிஎஸ்எப்-இன் 145 பட்டாலியனைச் சேர்ந்த கிரிஜேங்ஷ குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிகிச்சைக்காக அகர்தலாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் கிரன் குமார் கூறுகையில், 

வங்கதேசத்தின் ரங்கமதி மாவட்டத்தில் உள்ள ஜூபுய் பகுதியில், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் குழு, பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

பாதுகாப்புப் படை வீரர்கள் பதிலடி கொடுத்ததால், இரு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார். 

மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா-வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... ஊழல் ஒழிப்பும் பிஎம்டபிள்யூ கார்களும்!

பிகாா் தோ்தல்: ஜாதி ரீதியில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை -காவல் துறை எச்சரிக்கை

வெள்ள நீரில் மூழ்கிய வெளிதாங்கிபுரம் தரைப்பாலம் ஆபத்தை அறியாமல் செல்லும் பள்ளி மாணவிகள்

இந்த ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

தொடா் மழையால் அழுகிய நெல் கதிா்களை டிராக்டா் மூலம் உழுத விவசாயி

SCROLL FOR NEXT