நாட்டில் 5 கோடிகள் வழக்குகள் நிலுவை: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல் 
இந்தியா

நாட்டில் 5 கோடிகள் வழக்குகள் நிலுவை: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால் புதிதாக 100 வழக்குகள் பதியப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவில் 50 வழக்குகள் தீர்க்கப்பட்டால் புதிதாக 100 வழக்குகள் பதியப்படுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். 

ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “இந்தியாவில் ஒரு நீதிபதி 50 வழக்குகளைத் தீர்த்துவைத்தால் அவரிடம் மேலும் 100 வழக்குகள் வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பீடுகள் தவறானவை.

ஏனெனில் இந்தியாவில் நிலவும் சூழலும், மற்ற நாடுகளில் நிலவும் சூழலில் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் முன்பு இருந்ததைக் காட்டிலும் நீதிமன்றங்களை அணுகுவதில் விழிப்புணர்வுடன் உள்ளனர். அதேநேரத்தில் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க சாத்தியமான வழிகளில் உதவ சட்டத்துறை எப்போதும் தயாராகவே உள்ளது” எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT