மெட்ரோ நகரங்களை இணைக்க கூடுதல் விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா
நாட்டில் முக்கிய மெட்ரோ நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக 24 உள்நாட்டு விமானங்களை இன்று முதல் இயக்கவிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
புது தில்லி: நாட்டில் முக்கிய மெட்ரோ நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக 24 உள்நாட்டு விமானங்களை இன்று முதல் இயக்கவிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
பெரும்பாலான ரயில்கள் தில்லி - மும்பை, பெங்களூரு - ஆமதாபாத், மும்பை - சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மும்பை - பெங்களூரு மற்றும் ஆமதாபத் - புணே இடையே புதிய வழித்தடங்களிலும் விமானங்கள் இயக்கப்படவிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்து.
Advertisement
புதிதாக 24 விமானச் சேவைகள் தொடங்குவது குறித்து ஏர் இந்தியா பொது மேலாளர் மற்றும் தலைமைஅதிகாரி கேம்பெல் வில்சன் கூறுகையில், முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக உள்நாட்டுச் சேவையை அதிகரிக்கும் முயற்சியாக இது அமையும். கடந்த ஆறு மாதங்களாக ஏர் இந்தியா தனது கூட்டாளிகளுடன் மிக நெருங்கிப் பணியாற்றி வருகிறது. தற்போது அதற்கான பலன் கிடைத்து வருவதாகக் கூறுகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக 70 விமானங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 54 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. மற்ற 16 விமானங்களும் 2023ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகின்றன.