உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் முனுகோடு தொகுதிக்குட்பட்ட பகுதியில் இடைத்தேர்தலையோட்டி ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ், “பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த மக்களும் பயனடையவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மகாராஷ்டிரத்தில் செய்ததுபோல் தெலங்கானாவில் ஏக்நாத் ஷிண்டே செய்தது போல் ஆட்சியை அகற்றுவோம் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். யாரால் இதை செய்ய முடியும்? பாஜகவினர் தங்களது அதிகாரவெறியிலிருந்து இதனைத் தெரிவிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கேஜரிவாலிடம் நீதி கேட்ட தொகுப்பாளினி!
மேலும், “என் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யும் என பாஜகவினர் மிரட்டுகின்றனர். உங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள்” என சந்திரசேகர் ராவ் சவால் விடுத்தார்.
இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.