2 நாள் பயணமாக ஹிமாச்சல் செல்கிறார் ஜெ.பி நட்டா
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக இன்று ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல உள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பதிவில்,
ஹிமாச்சலில் உள்ள நஹானுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். எனது இளமைக் காலத்தில் பணிபுரிந்தபோது நஹான் பகுதியைச் சந்தித்த வாய்ப்பு, தற்போது மீண்டும் கிடைக்கப்போகிறது. பழைய நினைவுகளையும், தருணங்களை மீண்டும் அனுபவிக்கப் போகிறேன் என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைவர்களுடன் ஆலோசிக்க உள்ளார். பெண்டா சாஹப்பில் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.