மகாராஷ்டிரத்தின் நாக்பூர் நகரில் காதலை முறித்துக் கொண்டதால் 20 வயது பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதாபுல்டியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் காஜல். இவர் அங்கித் ரண்டிவ் (25) என்ற இளைஞனைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காஜல் திடீரென தனது காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்து, சூராதேவி என்ற இடத்தில் தனது காதலனுடன் உறவை முறித்துக் கொள்வது குறித்துப் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரண்டிவ், காஜலை தாக்கி, கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.
பின்னர், காஜல் உம்ராவ் குக்டே அருகிலுள்ள சுராதேவியின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் கொரடி போலீசாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நகரின் காபர்கெடா பகுதியிலிருந்து அவரை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.