கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, ஒருவர் காயம்

மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

PTI

மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்ததாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

உயிரிழந்த மூவரும் பக்கர்வாலா, ஜே.ஜே காலனியில் வசிப்பவர்கள். மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவுடன், அங்குள்ளவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் மங்கள்(60), ஜோகிந்தர்(42) ஆகியோர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மோகன்லால்(62) சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்குத் தடய அறிவியல் ஆய்வகத்தின் குழுக்கள் ஆய்வு செய்து ஆறு வெற்று தோட்டாக்கள் மற்றும் மூன்று செயல்படும் தோட்டாக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 25 முதல் 28 வயதுக்குள்பட்ட இருவர் இரவு 9.05 மணியளவில் பக்கர்வாலா கிராமத்திலிருந்து வருவதைக் காண முடிந்தது, சில நிமிடங்களுக்குப் பிறகு, திரும்பி ஓடுவதைக் கண்டதாக அதிகாரி கூறினார்.

அவர்களில் ஒருவர் கருப்பு தொப்பி அணிந்திருந்தார், மற்றொருவர் தலையில் மப்ளர் கட்டியிருந்ததாகத் துணை ஆணையர் சமீர் சர்மா தெரிவித்தார்.

சம்பவ நடைபெற்ற அன்று மோகன்லால், மங்களுடன் ஜோகிந்தரின் வீட்டிற்குச் சென்றுள்ளார், இரவு 9 மணியளவில், இரண்டு பேர் அங்கு வந்து, ஜோகிந்தரின் இறந்த தந்தை சதீஷ் வசிக்கும் இடத்தைப் பற்றி கேட்டனர்.

ஜோகிந்தர் தனது தந்தையின் புகைப்படத்தை சுட்டிக்காட்டியபோது, ​​மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். லால் வீட்டிற்குள் ஓடியபோது ஜோகிந்தரும் மங்களையும் சுட்டதில், இருவரும் கீழே விழுந்தனர்.

ஜோகிந்தர் சான்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், மங்கள் கூடார வியாபாரி, லால் இ-ரிக்ஷா ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. 

இதுதொடர்பாக மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT