உஸ்பெகிஸ்தான் - இந்தியா: பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு 
இந்தியா

உஸ்பெகிஸ்தான் - இந்தியா: பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.

DIN

நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்தும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் பகோதிர் குர்பனோவை சந்தித்தார். 

இந்தச் சந்திப்பின்போது, இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான பாதுகாப்புத் துறை உறவு குறித்து பேசப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. 

நிலையான அடிப்படைத் தன்மை வாய்ந்த பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு அடுத்தடுத்த காலங்களிலும் நீடிக்கும் எனவும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

லட்சுமிபுரத்தில் செப்.18-இல் மின்தடை

குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

பாஜக சாா்பில் வாலிபால் போட்டி

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT