முகப்பு
இந்தியா

குடியரசுத் தலைவருடன் சோனியா காந்தி சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

தில்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை இன்று நேரில் சந்தித்த சோனியா காந்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டு முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட சோனியா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால், இதுவரை குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →