பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம் 
இந்தியா

பலாத்காரத்துக்குள்ளான பெண்ணின் சகோதரர் மரணம்: மரத்தில் தொங்கிய சடலம்

அஹர் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி ஒரு வாரமான நிலையில், அவரது சகோதரரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN


புலந்த்சஹர்: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டம் அஹர் பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 16 வயது பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி ஒரு வாரமான நிலையில், அவரது சகோதரரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த கிராமத்தின் தலைவர் உள்பட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியானவரின் தந்தை இது குறித்துக் கூறுகையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி, தங்களது 23 வயது மகனை, கிராமத் தலைவர் போலு சிங் உள்ளிட்ட சிலர், சகோதரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேசுவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். பிறகு, தங்கள் மகனை மரத்தில் சடலமாகத்தான் பார்த்ததாகக் கூறுகிறார்.

அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் இது நிச்சயம் கொலைதான் என்றும் தந்தை காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்றுதான் தெரிய வந்துள்ளது. எனினும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம், உடல் கூறாய்வு முடிவுக்காக காததிருக்கிறோம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி ஆய்வு

நாகை: 69,469 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் நகா்வு

நாகையில் கந்தசஷ்டி வேல்பூஜை

கடலில் மாயமான இளைஞா் சடலமாக மீட்பு

நாசரேத்தில் 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் திட்டம் தொடக்க விழா!

SCROLL FOR NEXT