கோப்புப்படம் 
இந்தியா

இந்திய எல்லைப் பகுதியில் 2 பாக். பயங்கரவாதிகள் பலி

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கன்னிவெடியால் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

DIN

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கண்ணிவெடியால் பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ எல்லைப் பகுதியை நெருங்கியுள்ளனர். 

எல்லையைக் கடக்க 150 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நிலையில், 2 பயங்கரவாதிகளும் கண்ணிவெடியை மிதித்ததால் உடல் சிதறி பலியானதாகவும் அவர்களின் உடலை இன்று காலை மீட்டதாகவும் இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணிவெடியில் சிக்கி 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT